500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

Update: 2023-06-05 04:17 GMT

தமிழகத்தில் 500 நகர்புற நலவாழ்வு மையங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை 6ம்தேதி திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள நகர்புற நலவாழ்வு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், புதிதாத திறக்கப்பட உள்ள நகர்புற நலவாழ்வு மையங்களில் 12வகையான அத்தியாவசிய மருத்துவ சேவைகள், 63 வகையான மருத்துவ பரிசோதனைகள், 171 அத்தியாவசிய மருந்து வகைகள் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்