ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறுவழிச் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஒப்பந்ததாரர்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே நிலவும் பிரச்சினையால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால், உடனடியாக ஆறுவழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை கேட்டுக்கொண்டுள்ளார். சாலையை நல்ல நிலையில் பராமரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்று உறுதி அளித்துள்ளார்.