தரவரிசை பட்டியல் ஓபன் பிரிவில் 15 புள்ளிகளுடன் அர்மேனியா முதல் இடத்திலும், 14 புள்ளிகளுடன் இந்திய பி அணி 2ஆவது இடத்திலும் உள்ளது.
14 புள்ளிகள் பெற்ற உஸ்பெகிஸ்தானுக்கு 3ஆவது இடமும், 13 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்துக்கு 4ஆவது இடமும் கிடைத்துள்ளது. 13 புள்ளிகளுடன் ஈரான், அஜர்பைஜன் ஆகிய நாடுகள் ஐந்து மற்றும் 6ஆவது இடத்தில் உள்ளன.
12 புள்ளிகள் பெற்ற இந்திய ஏ அணி, துருக்கி ஆகியவை ஏழு மற்றும் 8ஆவது இடத்தில் உள்ள நிலையில், அமெரிக்காவுக்கு 9ஆவது இடமும், ஜெர்மனிக்கு 10ஆவது இடமும் கிடைத்துள்ளது.
மேலும், 10 புள்ளிகள் பெற்ற இந்திய சி அணி 38ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதேபோல், மகளிர் பிரிவில் 15 புள்ளிகள் பெற்ற இந்திய ஏ அணி முதலிடத்திலும், 14 புள்ளிகள் பெற்ற ஜார்ஜியா 2ஆவது இடத்திலும் உள்ளது.
13 புள்ளிகளுடன் உக்ரைன், போலந்து, பல்கேரியா, கஜகஸ்தான், மங்கோலியா, அஜர்பைஜன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
12 புள்ளிகள் பெற்ற அர்மேனியா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஒன்பது மற்றும் 10ஆவது இடத்தில் உள்ள நிலையில், 11 புள்ளிகள் பெற்ற இந்திய பி அணி 17ஆவது இடத்துக்கும், இந்திய சி அணி 23ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.