"முக்கிய துப்பு துலங்கியுள்ளது" - உயர்நீதிமன்றத்தில்தமிழக அரசு சொன்ன முக்கிய தகவல்

Update: 2023-08-09 03:39 GMT

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் ஐந்து புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புலி வேட்டை தொடர்பாக ஹரியானாவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், புலிகள் வேட்டை வழக்கில் முக்கிய துப்பு துலங்கியுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அடுத்த கட்ட அறிக்கைக்காக வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்