பெண்ணை சுத்தியால் அடித்து கொலை செய்த வழக்கு - மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- மனைவி பிரியக் காரணம் எனக் கூறி, பெண்ணை சுத்தியால் அடித்துக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செனனை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த மோசஸ் ஷரக் என்பவர், அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்
- அப்போது அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த கற்பகம் என்ற பெண், இருவரையும் சமாதானம் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மோசஸின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றார்.
- மனைவி பிரியக் காரணம் எனக்கூறி, மோசஸ் பிரச்சினை செய்ததால், கற்பகம் வீட்டை காலி செய்து விட்டு பக்கத்து தெருவுக்கு குடிபெயர்ந்தார்.
- இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு, வசித்து வந்த பழைய வீட்டின் அருகேயுள்ள நண்பர்களை பார்க்க, தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் கற்பகம் சென்றுள்ளார்.
- அப்போது அவரை பார்த்த மோசஸ், சுத்தியால் தலையில் தாக்கியதில் கற்பகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- இந்த வழக்கை, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், மோசஸ்க்கு ஆயுள் தண்டனையும், 16 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.