வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இத்தாலியில் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்டார். ரோம் மாநகரில், Urbaser நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்டதுடன், திடக்கழிவுகளை கையாளும் முறை மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தார். சென்னை மேயர் பிரியாவுடன், துணை மேயர் மகேஷ் குமார், திடக்கழிவு மேலாண்மை தலைமை பொறியாளர் மகேசன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் சுகாதாரம் குமார் ஜெயந்த் ஆகியோரும் கேட்டறிந்தனர்.