சென்னை பஸ் ஆப் எனும் செயலி - போக்குவரத்து கழகங்களை மேம்படுத்திட செயலி அறிமுகம்

Update: 2022-10-27 15:17 GMT

தமிழக போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திடும் வகையில் சென்னை பஸ் ஆப் எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த செயலி மூலம், பேருந்து வருகை மற்றும் புறப்பாடு, தடத்தில் வரும் இடம் அறிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுவரை இல்லாத மிகுந்த முன்னேற்பாடுகள் செய்து பேருந்துகளை இயக்கியுள்ளதால், பொதுமக்கள் அச்சமின்றி, பாதுகாப்பு மற்றும் மனநிறைவுடன் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்