அதானி குழுமத்துக்கு Check Mate? ஒத்துழைக்காத வெளிநாட்டு அரசுகளால் தீவிரம் காட்டும் செபி..

Update: 2023-05-01 16:29 GMT

அதானி குழுமம் பற்றி செபி அமைப்பு நடத்தும் விசாரணைக்கு பல்வேறு நாட்டு அரசுகள் ஒத்துழைக்க மறுப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


அதானி குழுமம் பங்கு சந்தை முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ளதாக ஜனவரி 24இல் வெளியான ஹிண்டனர்பர்க் அறிக்கை கூறியிருந்தது. இதனால் அதானி குழும பங்கு விலைகள் வெகுவாக சரிந்து, முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற ஆணையின் பேரில், அதானி குழுமத்தின் பங்கு சந்தை முறைகேடுகள் பற்றி செபி ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணை தொடங்கியது. மொரீசியஸ், யு.ஏ.இ, சைப்ரஸ், பிரிட்டீஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, அதானி பங்குகளில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

ஆனால் இந்த அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் பங்குதாரர்கள் பற்றிய விவரங்களை அளிக்க பல்வேறு நாடுகள் மறுத்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் மீதான விசாரணைக்கான கால அவகாசத்தை மேலும் ஆறு மாதம் நீட்டிக்க, உச்ச நீதிமன்றத்தில் செபி அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்