"நடவடிக்கை எடுக்காமல் விஜய்க்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு அதிகாரி" - பரபரப்பு புகார்
லியோ பாடல் சர்ச்சையில் மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லியோ படத்தின் நா ரெடி பாடலின் மூலம் போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் விஜய் நடித்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செல்வம் என்பவர் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள தணிக்கை குழு அலுவலகத்திலும் புகார் அளித்த நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாமல் மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பாலமுரளி, விஜய்க்கு உறுதுணையாக செயல்படுவதாக செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.