ஃபோட்டான் கதாஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பதவி வகித்த நிலையில், 2011ம் ஆண்டில் அங்கிருந்து வெளியேறினார். பின்பு அந்நிறுவனம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என, வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆஜராகும்படி கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து, விலக்களித்து உத்தரவிட்டுள்ளது.