நெல்லை மாவட்டம் வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் 55 கிலோ இளவட்ட கல்லை தூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் ராஜகுமாரி முதலிடத்தை பிடித்தார். இரண்டாவது இடத்தை தங்க புஷ்பம் என்ற பெண் வென்றார். ஆண்களுக்கான 98 கிலோ இளவட்டக்கல் போட்டியில் முதல் பரிசை விக்னேஸ்வரனும், இரண்டாவது பரிசை பாலகிருஷ்ணனும் தட்டிச் சென்றனர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கியும், சால்வை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டது.