வெள்ளைச் சேலை உடுத்தி ஒரே இடத்தில் கூடி பொங்கல் வைத்த பெண்கள் - என்ன காரணமா இருக்கும்..?

Update: 2025-01-16 03:24 GMT

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே, வெள்ளைச் சேலை உடுத்தி, பெண்கள் பொங்கல் வைக்க, கிராம மக்கள் சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். சலுகைபுரம் கிராமத்தில் இந்த வித்தியாசமான பொங்கல் கொண்டாட்டம் பல தலைமுறைகளாக நடைபெற்று வருகிறது. தங்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காக, பெண்கள் ஆபரணங்கள் எதுவும் அணியாமல், வெள்ளைச் சேலை உடுத்தி, புதுப்பானையுடன் ஊர்வலமாக சென்று, மந்தையில் கூடி, குலதெய்வமான பச்சை நாச்சியம்மனை வழிபட்டனர். பின்னர், சாமியாடி பூஜையை முடித்து வைக்க, ஆண்களும், பெண்களும் கூடி ஒரே இடத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு, கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்