"குழந்தை தகப்பன் கிட்ட கேட்பது போல.." கல்குவாரி உரிமையாளர்கள் கோரிக்கை | Quary | Kovai
தொடர்ந்து இதே நிலை நீடித்தால் குவாரிகளை தமிழக அரசிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழி இல்லை என கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து குவாரி உரிமையாளர்கள் மனு அளித்தனர். அதில், தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தினர், கடந்த 5 நாட்களில் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குவாரிகளில் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.