அரசுப்பள்ளியில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் - அதிர்ச்சி சம்பவம்

Update: 2022-10-21 13:52 GMT

உத்திர பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளியின் சமையலறையில் இருந்து பெட்டி பெட்டியாக சட்டவிரோத மதுபானங்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் எல்லையை ஒட்டிய குஷி நகரில் இருக்கும் பஸ்டிலா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் சமையலறையில் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்த மாணவர் ஒருவர் உடனடியாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் அளித்துள்ளார்.

தொடர்ந்து உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் பள்ளிக்கு விரைந்த போலீசார் அங்கிருந்து 51 பெட்டிகள் நிறைய சட்டவிரோத மதுபானங்களை கண்டடுத்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதாலும் எல்லைப்புறங்களில் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதாலும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் நேரடியாக மதுபானங்களை பீகாருக்கு கொண்டு செல்லாமல் மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பதுக்கி வைத்து சமயம் வரும்போது அவற்றை பீகாருக்கு கடத்தி செல்வதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே அரசுப் பள்ளியில் மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தை முன்வைத்து உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்