சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் | chennai airport | meenambakkam | thanthi tv
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்துக்கு வந்த இ-மெயிலில், மர்ம நபர் ஒருவர் வெடுகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். அதில் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஒருவர், விமானத்தில் பயணிக்க இருப்பதாகவும், அப்போது விமானம் வெடித்து சிதறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வாகன நிறுத்துமிடங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளுக்கு வழக்கமாக 3 அடுக்கு சோதனைகள் நடத்தப்படும் நிலையில், கூடுதலாக சோதனை ஒரு நடத்தப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து, விமான நிலைய போலீரும், சைபா் கிரைம் பிரிவு போலீசாரும் விசாரித்து வருகின்றனா்.