பாஜக Vs பி.ஆர்.எஸ் போஸ்டர் யுத்தம்.. 'கட்சி தாவினால் ஊழல் அற்றவர்களா?' - இணையத்தில் வைரலாகும் போஸ்டர்கள்
- தெலங்கானாவில் பாஜக மற்றும் அம்மாநிலத்தை ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சிகளிடையே நடைபெற்று வரும் போஸ்டர் யுத்தம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கர்நாடகாவில் மட்டுமின்றி தெலங்கானாவிலும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை வரவேற்று பி.எஸ்.ஆர் கட்சியினர் அடித்து வரும் போஸ்டர்கள் ஒவ்வொன்றும் பேசு பொருளாகி வருகின்றன.
- சனிக்கிழமை அன்று டெல்லி மதுபான ஊழல் விவகாரம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகளான கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது
- . இந்நிலையில், பிற கட்சிகளில் இருந்து பாஜகவிற்கு தாவிய நாராயண ரானே, சுவேந்து அதிகாரி, ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஈஸ்வரப்பா மீதுள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்காதது ஏன்? என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், பாஜகவிற்கு தாவிய தலைவர்களின் புகைப்படங்களுடன் அமித்ஷாவை வரவேற்று பி.எஸ்.ஆர் கட்சியினர் புதிதாக போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.