பாஜக பிரமுகர் கொலை வழக்கு - சரணடைந்த 9 பேருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2023-05-05 14:04 GMT

பூந்தமல்லி அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரை, 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாஜக எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில பொருளாளர் பிபிஜிடி சங்கரை, நசரத்பேட்டை அருகே மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமார் உள்ளிட்ட 9 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் சரண்டைந்தனர். அவர்கள் 9 பேரையும் எட்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து, பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்