கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதி - 7,500 வாத்துக்கள் அழிப்பு | kerala | thanthi tv
கேரள மாநிலம் கோட்டயம் அருகே முண்டாரில் பறவை காய்ச்சல் அச்சத்தால் 7 ஆயிரத்து 500 வாத்துக்கள் அழிக்கப்பட்டன. முண்டாரில் ராமன் என்பவருக்கு சொந்தமான 7 ஆயிரத்து 500 வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட கால்நடை அலுவலர் ஆகியோர் தலைமையில், அனைத்து வாத்துக்களும் அழிக்கப்பட்டன. இதனால் ராமனுகு 14 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து முண்டாரில் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டும் பறவைக் காய்ச்சலால் ராமனின் 7 ஆயிரம் வாத்துக்கள் பலியாகின. இதனால் அவருக்கு 2 ஆண்டுகளில் மட்டும் 28 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.