நடுரோட்டில் 'பைக் சாகசம்' நீதிமன்ற கூண்டில் TTF வாசன்

Update: 2022-09-28 02:41 GMT

கோவையில் யூட்யூபரான ஜி.பி.முத்துவை அழைத்துக் கொண்டு 150 கி.மீ. வேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற டிடிஎப் வாசனின் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து போத்தனூர் மற்றும் சூலூர் போலீசார் தலா 2 வழக்குகளை பதிவு செய்தனர். போத்தனூர் போலீசார் டிடிஎப் வாசனை தேடி வந்த நிலையில் மதுரைக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பாக அவர் சரணடைந்தார். காலை 10.30 மணிக்கு ஆஜரான அவர் மாலை 5.30 வரை நீதிமன்ற கூண்டில் அமர்ந்திருந்தார். அப்போது 2 பேர் உத்தரவாதம் கொடுத்த நிலையில் மாலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதேநேரம் சூலூர் போலீசார் பதிவு செய்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை வாசன் ஆஜராக உள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்