பாரதிய ஜனதா உடனான கூட்டணியை கடந்த வாரம் முறித்து கொண்ட நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கடந்த வாரம் முதல்வராக எட்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றார். அன்றைய தினம் முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் மட்டுமே பதவி ஏற்று கொண்டனர். இந்நிலையில் எந்த எந்த துறைக்கு யார் யார் அமைச்சர்கள், அவர்களது இலாகாக்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் தற்போது உடன்பாடு எட்டிய நிலையில், நாளை புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர். பீகார் ஆளுநர் மாளிகையில் நாளை மாலை 04.30 மணி அளவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு மூன்று அமைச்சரவை இடங்கள் வழங்கப்பட உள்ளன.