பெலகாவி விவகாரத்தால் டெல்லிக்கு புது தலைவலி... "விட்டால், குஜராத், ம.பி.-யும் கேட்பார்கள்" - மத்திய அமைச்சர் கருத்தால் புது சர்ச்சை

Update: 2022-12-10 15:39 GMT

கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையிலான எல்லை விவகாரத்தில், மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே புதிய கருத்தைக் கூறியுள்ளார். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்ட எல்லைப் பிரச்சனையை, மகாராஷ்டிர அரசியல் கட்சிகள் டெல்லிவரை கொண்டு சென்றுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் சிவசேனை தலைவர் சந்தித்துப் பேசினர்.

அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் அமித் ஷா, இரு மாநில முதலமைச்சர்களுடனும் வரும் 14ஆம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, மகாராஷ்டிர அரசாங்கம் கறாரான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். கர்நாடக எல்லைப் பகுதியில் மட்டுமல்ல, குஜராத், மத்தியப்பிரதேச எல்லைகளில் உள்ள கிராமங்களிலும் இதேபோல கோரிக்கையை வைப்பார்கள் என்றும், மகாராஷ்டிர முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் மாநிலத்தில் உள்ள எந்த கிராமத்தையும் விட்டுத்தரக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அத்வாலே கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்