அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைக்கு பதிலடியாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக பல பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றது... கடந்த வெள்ளியன்று, மேலும் நூற்றுக்கணக்கான ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது. இந்நிலையில், ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய ரஷ்யா தடை விதிக்கப்பட்டுள்ளது.