பிறந்த உடனே பரிதாபமாக இறந்த சிசு.. இறுதிச்சடங்கு முடியும் முன் தாயும் மரணம் - 13 ஆண்டுக்கு பின் தாய்மை அடைந்தும் சோகம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை பாரதி நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் - அவரது மனைவி முத்துமாரி. இந்த தம்பதியினருக்கு, 13 ஆண்டுகள் கடந்த நிலையில், முத்துமாரி தாய்மை அடைந்தார்.
இதனையடுத்து பிரசவத்திற்காக, முத்துமாரியை, கடந்த புதன்கிழமை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்து உள்ளார்.
இந்த நிலையில், அதிகாலை முத்துமாரிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதை தொடர்ந்து இறந்த குழந்தையின் உடலை பெற்ற உறவினர்கள் இறுதிச் சடங்குகளை செய்து உள்ளனர்.
பின்னர் சிறிது நேரத்திலேயே பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட முத்துமாரி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரியின் உறவினர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.