நண்பனுடன் Tour வந்த பாகுபலி யானை.."நாங்களும் சுற்றி பார்க்கத்தான் வந்திருக்கோம்"

Update: 2023-05-30 03:11 GMT

மேட்டுப்பாளையத்தில் வணிக வளாக பகுதிக்குள் ஒய்யாரமாய் நடந்த சென்ற காட்டு யானைகளை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

கல்லார் வனப்பகுதியில் இருந்து வந்த பாகுபலி காட்டு யானை, நேற்று இரவு மற்றோரு யானையுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் நெடுஞ்சாலையை கடந்து சென்றது. இதனால் அவ்வழியே இருபுறமும் உதகை செல்லும் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மெதுவாக சாலையை கடந்த இரு யானைகளும், சாலையோரம் இருந்த வணிக வளாகத்தில் நுழைந்து, அங்கிருந்த உணவகங்கள், கடைகளை நோட்டமிட்டவாறு நடந்து சென்றன. யானைகளை பார்த்த‌தும் அங்கிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனினும், யானைகளை விரட்டவோ அச்சுறுத்தவோ சப்தம் எழுப்பவோ வேண்டாம் என வனத்துறையினர் ஏற்கனவே எச்சரித்திருந்த‌தால், யாரும் விரட்டவில்லை. யானைகள் வணிக வளாகத்தின் பின்புறம் உள்ள தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. யானைகள் வருகையால் அரை மணி நேரமாக நிறுத்தப்பட்ட வாகனங்கள், பின்னர் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்