ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் - 3ம் சுற்றில் ஜோகோவிச் அபார வெற்றி

Update: 2023-01-22 10:14 GMT

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றில் முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் கால்பதித்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று ஆட்டத்தில் பல்கேரிய வீரர் டிமிட்ரோவை 7க்கு 6, 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் செர்பிய வீரர் ஜோகோவிச் வென்றார்.

நாளை நடைபெறும் நான்காம் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டிமினாருடன் ஜோகோவிச் மோதவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்