தெரியாமல் வார்த்தையை விட்ட தந்தை.. சரக்கு ஊத்தி கொடுத்து சங்கை நெரித்த மகன்

Update: 2023-02-24 05:53 GMT
  • மதுவுக்கு அடிமையாகி, தகாத வார்த்தைகளால் திட்டி வந்த தந்தையை, சொந்த மகனே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது.
  • ஆண்டிப்பட்டி தாலுகா பொம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கு, 2 மகன்கள் உள்ளனர்.
  • இதில் மூத்த மகனுக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், இளைய மகன் விக்ரமன் தனது அத்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
  • பொறுப்பற்ற முறையில் இருந்து வந்த இளங்கோவன், மதுபோதையில், விக்ரமனை, தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார்.
  • இதில், ஆத்திரமடைந்த விக்ரமன், தனது உறவினரான தமிழ்செல்வம் உதவியுடன், தந்தைக்கு மது வாங்கிக் கொடுத்து, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
  • தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த விக்ரமன் மற்றும் தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்