தங்க நகை வாங்குபவர்கள் கவனத்திற்கு... "மார்ச் 31-க்கு பின்..." - மத்திய அரசு போட்ட முக்கிய உத்தரவு

Update: 2023-03-04 14:49 GMT

மார்ச் 31க்கு பிறகு ஹால்மார்க் எண் பொறிக்கப்படாத தங்க நகைகளை விற்பனை செய்யவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்ய, ஹால்மார்க் முத்திரை அளிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது. ஹால்மார்க் முத்திரை பெற, தனித்துவமிக்க ஆறு இலக்க எண் ஒன்று ஒவ்வொரு நகை மீதும் பொறிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த நகையை உருவாக்கிய நிறுவனம் மற்றும் ஹார்ல்மார்க் முத்திரை அளித்த மையம் எது என்பதை எளிதாக கண்டறிய முடியும்.

நாடு முழுவதும் 940 ஹால்மார்க் முத்துரை அளிக்கும் மையங்கள் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன. சிறு, குறை நகை நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதற்கு ஆகும் கட்டணத்தில் 80 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் 90 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது. ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படுவதன் மூலம், தங்க நகை வாங்குபவர்கள் ஏமற்றப்படுவது தடுக்கப்பட்டு, நாடு முழுவதும் தங்க நகைகளின் தரத்தை ஒரே அளவில் இருக்கச் செய்ய முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்