நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் கண்ணன். இவர் மீது பல வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ள நிலையில், திடீரென நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பானது.
விசாரணையில், திருமணமான பெண் ஒருவருடன் கண்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்த பெண்ணை கண்ணன் சித்ரவதை செய்ததாகவும் கூறி போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதன் விசாரணைக்காக கண்ணனை அழைத்த போது, அவர் தற்கொலைக்கு முயன்றது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் சுசீந்திரம் போலீசாரும், தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் நேசமணிநகர் போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.