படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் - தலைநகர் வந்தடைந்த உடல்
மறைந்த முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் டோக்கியோவில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டது...
படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் - தலைநகர் வந்தடைந்த உடல்
மறைந்த முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் டோக்கியோவில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டது.மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் ஷின்சோ அபே, முன்னாள் கடல் சார் தற்காப்புப் படை வீரரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலக நாடுகளின் தலைவர்கள் சின்சோ மறைவிற்கு இரங்கலும், கண்டனமும் தெரிவித்திருந்த நிலையில், அவரது உடல் டோக்கியோவில் உள்ள ஷின்சோ இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அபேவின் இறுதிச் சடங்கு வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.