உளவுப் பிரிவுக்கு புதிய உதவி ஆணையர் நியமனம் - டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு

Update: 2022-09-25 06:33 GMT

கோவை மாநகர சிறப்பு உளவுப் பிரிவு உதவி ஆணையாராக இருந்து வந்த பார்த்திபன், உளவுப் பிரிவு உதவி ஆணையராகவும், கோவை மாநகர சிங்காநல்லூர் சரக உதவி ஆணையராக இருந்து வந்த அருண், சிறப்பு உளவுப் பிரிவின் உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உளவுப் பிரிவின் உதவி ஆணையர் பொறுப்பை கவனித்து வந்த முருகவேல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற நிலையில், காலியாக இருந்த உளவுப் பிரிவு உதவி ஆணையர் பொறுப்பிற்கு தற்போது அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வந்த தொடர் பெட்ரோல் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளர்.

Tags:    

மேலும் செய்திகள்