ஈரோட்டுக்கு தேர்தல் கண்காணிப்பாளர் நியமனம் | Erode East By Polls

Update: 2023-02-06 14:14 GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரியான ராஜ்குமார் பொது கண்காணிப்பாளராகவும், கௌதம்குமார் ஐஆர்எஸ் செலவினக் கணக்கு பார்வையாளராகவும், சுரேஷ்குமார் சாடிவ், காவல்துறை கண்காணிப்பாளராகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏதேனும் முறைகேடுகள் நடந்தாலோ, தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டாலோ, மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுக் கண்காணிப்பாளருக்கு 9434444222 என்ற எண்ணிலும், காவல் கண்காணிப்பாளர் 8335833440 என்ற எண்ணிலும், புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்