பாஜக முன்னாள் மாநில பொதுச்செயலாளர் KT ராகவன் வீட்டுக்கு சென்ற அண்ணாமலை
பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் நீண்ட நாட்களாக ஒதுங்கி இருந்த பாஜகவின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவனின் வீடு கிரகப்பிரவேச நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். புதிய இல்லத்தில் கிரகப்பிரவேச நிகழ்வில் பங்கேற்று, அனைத்து நலன்களும் பெற்று, நீண்ட நாட்களாக வளமுடன் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாக அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றவுடன், பாலியல் புகார் சர்ச்சையில் சிக்கி, பாஜகவில் தான் வகித்த பதவியை கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.