அண்ணாமலை பல்கலை. பதிவாளர் உத்தரவிற்கு தடை

Update: 2022-12-20 10:51 GMT

உரிய தகுதி பெறாதவர்களை கிரேடு 2 சிறப்பு அலுவலர்களாக பதிவிறக்கம் செய்தும் அவர்களுக்கான ஊதிய குறைப்பு செய்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை சேர்ந்த தனசேகர பாண்டியன், ராஜரத்தினம் கரூரை சேர்ந்த மகேஷ் குமார், நெல்லையை சேர்ந்த ராய பாண்டி, சிவகங்கை சேர்ந்த சரவணன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில் "2017 ஏப்ரல் 28ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அதிகம் உள்ள நிலையில், அவர்கள் வெவ்வேறு துறைகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளில் பணி அமர்த்தப்பட்டனர். அதன் அடிப்படையில் நாங்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டோம்.

சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டதற்கு இரண்டாம் தரத்தில் முதுகலை பட்டப்படிப்பு இருக்க வேண்டும். ஆனால் பலர் அத்தகுதியை பெறவில்லை. இதனால் 2015 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் சிண்டிகேட் குழு இரண்டாம் வகுப்பில் முதுகலை பட்டப் படிப்பு படித்தவர்களை சிறப்பு அலுவலர்களாகவும், தகுதியை பெறாதவர்களை சிறப்பு அலுவலர் கிரேட் 2 என்றும் பிரித்தனர். ஊதியமும் குறைக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் ஆன நிலையில் ஊழியர்களின் ஆட்சேபனைகளை கேட்டறிந்து புதிய முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் உரிய தகுதி பெறாதவர்களை கிரேடு 2 சிறப்பு அலுவலர்களாக பதிவிறக்கம் செய்தும் அவர்களுக்கான ஊதிய குறைப்பு செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.

இது சட்டோராதமானது ஆகவே, பதிவிறக்கம் மற்றும் ஊதிய குறைப்பு தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி தண்டபாணி, "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலர்களை பதிவிறக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்குஇடைக்கால தடை விதித்து, வழக்கு தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்