உடல் உறுப்பு தானத்தால் 2 உயிரை காப்பாற்றிய 18 மாத குழந்தை..! நெஞ்சை கனக்க செய்யும் சம்பவம்...
அரியானாவில் மூளைச்சாவு அடைந்த 18 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
அரியானாவின் மேவத் பகுதியில் மஹிரா என்ற 18 மாத பெண் குழந்தை, வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் போது பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்தது. அதில், மூளை கடுமையாக பாதிக்கப்பட்டதால், குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் குழந்தையின் உடலுறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர். அதன்படி, தானமாக பெற்ற கல்லீரல் 6 வயது குழந்தைக்கும், இரு சிறுநீரகங்கள் 17 வயது நோயாளிக்கும் பொறுத்தப்பட்டன. மேலும் குழந்தையின் கண்களின் இருந்து எடுக்கப்பட்ட கார்னியா மற்றும் இதய வால்வுகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பாதுகாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டெல்லியில் உடலுறுப்பு தானம் செய்த இரண்டாவது மிகவும் சிறிய குழந்தை என்ற பெருமையை மஹிரா பெற்றுள்ளார்.