மனிதனின் மூளையையே சாப்பிடும் அமீபா... மூக்கு வழியாக ஆபத்து..ஆளையே கொன்னுடும் - 7 நாளில் குழந்தையின் உயிரை எடுத்த பயங்கரம்

Update: 2023-07-23 01:45 GMT

மூளையை உண்ணும் ஒரு வகை கொடூர அமீபாவால் அமெரிக்காவில் இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அமெரிக்காவில் திடீரென காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான இரண்டு வயது குழந்தை.... ஏழு நாட்களுக்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஆனால் உண்மையிலேயே காய்ச்சலால் அந்த குழந்தை உயிர் இழக்கவில்லை.... Naegleria fowleri என்ற மூளையை உண்ணும் அமீபா பாதிப்பால் அந்த குழந்தை துடி துடித்து உயிரிழந்திருக்கிறது.

நீரூற்றொண்டில் குழந்தை குளித்த போது.... அதன் மூக்கு வழியாக இந்த அமீபா அவனது உடலுக்குள் புகுந்திருக்கிறது.

இதற்கு முன்பு இந்த மூளையை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டோர் அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே உயிர் பிழைத்திருந்தனர்.

ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை ஏழு நாட்கள் அதை எதிர்த்து... போராடி உயிரிழந்திருக்கிறான்.

முதலில் அந்த குழந்தைக்கு மூளை காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என்றே தான் சந்தேகிக்கப்பட்டது.

அதன் பிறகு தான் குழந்தைக்கு மூளை உண்ணும் அமீபா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இதேபோன்று மூளை உண்ணும் அமீபாவால் உயிரிழந்திருந்தார்.

பொதுவாக இந்த உயிர் உண்ணும் அமீபா, ஏரிகள், ஆறுகள் மற்றும் நீரூற்றுகளில் காணப்படும். ஒருவரது மூக்கின் வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழையும் பொழுது அவரது உயிருக்கே எமனாக மாறிவிடுகிறது.

பொதுவாக இந்த வகை அமீபா பாதிப்பு ஏற்பட்டால் 12 நாட்களில் இதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்குமாம்.

தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து பகுதி கடினமாகுவது, வலிப்பு, மற்றும் கோமா ஆகியவை இந்த நோயின் அறிகுறியாக அறியப்படுகிறது.

அறிகுறி தோன்றிய 18 நாட்களிலே ஒருவர் உயிரிழந்துவிட நேரிடும் என்பதன் மூலம் இந்த நோய் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்