பலூனில் விண்வெளிச் சுற்றுலா பயணம்..பிரெஞ்சு உணவு, Wifi-னு அசத்தும் நிறுவனம்

Update: 2023-05-11 06:48 GMT

பலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல, பிரான்ஸைச் சேர்ந்த Zephalto நிறுவனம் திட்டமிட்டுளளது.

ராக்கெட் மூலம் ஏவப்படும் விண்கலங்கள் மூலம் விண்வெளி  பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹைடரஜன் அல்லது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பிரம்மாண்டமான பலூன்கள் மூலம் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள Zephalto நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பூமியில் இருந்து 25 கிலோ மீட்டர் உயரத்திற்கு 2025 முதல் பயணிகளை அழைத்துச் செல்லப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு கட்டணமாக ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டு, முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பலூனின் அடிப்பகுதியில் பொருத்தப்படும் கேபினில் ஆறு பயணிகளும், இரண்டு விமானிகளும் செல்ல முடியும். 25 கிலோ மீட்டர் உயரம் செல்ல ஒன்றரை மணி நேரமும், அந்த உயரத்தில் 3 மணி நேரப் பயணமும் திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்தின் போது உயர் தர பிரெஞ்சு உணவு பரிமாறப்பட உள்ளது. இதில் Wi Fi வசதி உள்ளதால், பயணிகள் எடுக்கும் புகைபடங்களை உடனுக்குடன் சமூக வலை தளங்களில் பகிர முடியும்....

Tags:    

மேலும் செய்திகள்