புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், நடப்பு கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல், 8ஆம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும் என்றும், 9-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித்தேர்வில் 35 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.