திருவள்ளூர் அருகே சீல் வைத்து மூடப்பட்ட மதுபான ஆலையின் ஓட்டை பிரித்து, காலாவதியான மதுவை மது பிரியர்கள் எடுத்து குடித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மதுபான ஆலையை, கடந்த 2013 ஆம் ஆண்டு கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். இந்நிலையில் அந்த குடோனில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மது பாட்டில்கள் இருப்பதை தெரிந்து கொண்ட அப்பகுதி சேர்ந்த குடிமகன்கள், கடந்த 10 ஆண்டுகளாக, நள்ளிரவில், ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி காலவதியான மதுவை அருந்தி வந்ததுள்ளனர். அந்த மதுவை குடித்த அப்பகுதியை சேர்ந்த குடிமகன் ஒருவர், அதிக மதுபோதையில் தன்னைத்தானே கழுத்தில் கத்தி வைத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இது குறித்து அவருடைய குடும்பத்தினர் திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் விசாரணையில் இந்த விவகாரம் தெரியவர மூடப்பட்ட மதுபான கிடங்கை மீண்டும் திறந்து, அங்கிருந்த காலாவதியான சுமார் 200 மதுபான பாட்டில்களை அழித்தனர்.