அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்வதற்காக, நாகர்கோயில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இளைஞர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம், நாகர்கோயில் அண்ணா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை தொடங்கி, செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இரவில் மட்டுமே ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்பட 16 மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். முன்பதிவு செய்துள்ள 36 ஆயிரம் பேரும் முகாமில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளான சனிக்கிழமை, 8 மணி நேரத்துக்கு முன்னரே இளைஞர்கள் குவியத் தொடங்கினர். தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அவர்கள் நம்பிக்கையுடன் கூறினார்கள்.