வைகை ஆற்றில் பிணம்.. போலீசாரையே திருப்பி போட்ட திருப்பம்.. புதிய கோணம்.. தலைகீழாக மாறிய கேஸ்..

Update: 2024-11-15 06:55 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நண்பனை கொலை செய்து வைகை ஆற்றில் தள்ளிவிட்டு தப்பிச் சென்ற இருவரை இரண்டு ஆண்டுகளுக்குப் பின் போலீசார் கைது செய்துள்ளனர்.சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுப் பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. அவர் குளிக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மதுரை சொக்கலிங்க நகரைச் சேர்ந்த செந்தில் என்பவரும், அவருடைய நண்பர் சையது ஜாபர் அலி என்பவரும் சோழவந்தான் பேட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, சரணடைந்த இருவரிடமும் பாலமுருகன் பணம் வாங்கி விட்டு திருப்பித் தராமல் தாமதப்படுத்தி வந்தது தெரியவந்தது. 2 ஆண்டுகளுக்கு முன், சம்பவ நாளன்று மூவரும் வைகையாற்று பகுதியில் மது அருந்தியபோது, பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த செந்திலும், சையது ஜாபர் அலியும் பாலமுருகனை கடுமையாகத் தாக்கி கொன்று ஆற்றில் தள்ளி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதை சமீபத்தில் போதையில் தங்கள் நண்பர்களிடம் தெரிவித்த இருவரும், போலீசார் தங்களை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்