64 ஆண்டுகளுக்குப் பிறகு திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு மகசேசே விருது நேரில் வழங்கப்பட்டது.
1959ல் தலாய் லாமாவுக்கு இவ்விருதானது அறிவிக்கப்பட்டது. ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் மகசேசே விருது, பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே பெயரில் வழங்கப்படுகிறது. புனித மதத்தினைப் பாதுகாக்கும் வகையிலான துணிச்சலான போராட்டத்திற்காக மகசேசே விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருந்ததால் அவரால் அவ்விருதைப் பெற முடியவில்லை. இந்நிலையில், தற்போது 64 ஆண்டுகளுக்குப் பிறகு மகசேசே விருது தலாய்லாமாவுக்கு நேரில் வழங்கப்பட்டது.