இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.34 மணி முதல் 6.32 வரை இந்த கிரகணம் ஏற்படுவதால் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் முழுமையாக பார்க்க முடியாது. அதே சமயம் ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இந்த கிரகணம் நன்றாக தெரியும் என கண்டறியப்பட்டுள்ளது மேலும் தென்கிழக்கு ஆசியா, இந்தியப் பெருங்கடல் பகுதி, அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் குறைந்தபட்ச பகுதி கிரகணமாக பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகணம் முழு வளைய கிரகணம் தோன்றுவதற்கு முன், சந்திரனால் முழுமையாக மறைக்கப்பட்டு முழு சூரிய கிரகணமாக தோன்றி பின்னர் வளைய கிரகணமாக மீண்டும் மாறும். பூரண சூரிய கிரகணம் என அழைக்கப்படும் இந்த வகை கிரகணம், மீண்டும் 2172 ஆம் ஆண்டு தோற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.