17 வயது மாணவி மீது ஆசிட் வீசிய விவகாரம்..ஆன்லைன் ஷாப்பிங்காள் வந்த விபரீதம் - விசாரணையில் அதிர்ச்சி
டெல்லியின் மோகன் கார்டன் பகுதியில் 17 வயது மாணவி மீது ஆசிட் வீசிய விவகாரத்தில் மூன்று பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலன் என விசாரணையில் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
முக்கிய குற்றவாளியான சச்சின் அரோரா பாதிக்கப்பட்ட பெண் இருவரும் காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண்ணுடன் காதல் முறிந்ததும், அவளைக் கொல்ல திட்டம் தீட்டி ஆன்லைன் ஷாப்பிங் பிளிப்கார்ட்டில் குற்றவாளி ஆசிட் வீசி வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சச்சின் அரோராவைத் தவிர மற்ற இரண்டு குற்றவாளிகள் ஹர்ஷித் மற்றும் வீரேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்பு மாணவி காதலை முறித்துக் கொண்டதால் மனமுடைந்த சச்சின் இந்தத் தாக்குதலை திட்டமிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பிரிந்த பிறகு அவருடன் பேசுவதை அந்த பெண் நிறுத்திவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.