வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் விவகாரம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Update: 2023-03-29 04:31 GMT
  • உக்ரைன் போர் காரணமாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படித்து, இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பை முடிக்காத மாணவர்களுக்கு, இந்தியாவில் தேர்வு எழுத அனுமதிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
  • இது தொடர்பாக பஞ்சாபைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி, பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
  • அப்போது, உக்ரைன் போர் மற்றும் கொரோனா காரணமாக, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படித்து, இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பை முடிக்காத மாணவர்களுக்கு, இரு கட்டங்களாக, ஓராண்டுக்குள் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று, மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
  • இதை ஏற்ற உச்சநீதிமன்றம், இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பை முடிக்காத மாணவர்களுக்கு, இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது
Tags:    

மேலும் செய்திகள்