சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுள்ளி பாளையம் பகுதியை லோகேஷ் என்பவர், பணி நிமித்தமாக சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ராசிபுரம் - ஆத்தூர் சாலையில் அருகே, ரயில்வே மேம்பாலம் பணி நடைபெறுவதால் அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற லோகேஷ், எதிர்பாராத விதமாக விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.https://youtu.be/l9sTIsSfUDQ