ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளான பாலசோரில், 51 மணி நேரத்தில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு, சரக்கு ரயில் இயக்கப்பட்டது. சீரமைப்பு பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கேயே அமர்ந்து கண்காணித்தார். இரண்டு வழித்தடத்திலும் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாகப்பட்டனத்தில் இருந்து ரூர்கேலா நோக்கி, நிலக்கரி ஏற்றப்பட்ட சரக்கு ரயில் இயக்கப்பட்டது. அப்போது, ரயிலை கையசைத்து வரவேற்ற அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பினார். ரயில் போக்குவரத்து இனி சீராகும் என அவர் தெரிவித்தார்.