கவனம் பெறும் நாட்டின் இளம் மேயர்...ஆர்யாவின் வித்தியாசமான திருமண அழைப்பிதழ்

Update: 2022-09-01 12:36 GMT

திருவனந்தபுரம் மேயராக செயல்பட்டு வரும் ஆர்யா ராஜேந்திரனுக்கும், பாலுசேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சச்சின்தேவுக்கும் வரும் 4ம் தேதி கட்சி அலுவலக அரங்கிலேயே திருமணமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆரியா ராஜேந்திரன் நேரில் சென்று அழைப்பிதழ் தர முடியாதவர்களுக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பில், திருமணத்திற்கு வருவோர் தனக்கு அன்பளிப்பு தர வேண்டாம் எனவும், அவ்வாறு அளிக்க நினைத்தால் மாநகராட்சியின் கீழ் இயங்கும் காப்பகங்களிலோ, அல்லது கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கோ அன்பளிப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்