ஆவடியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையான சுவர்ண தாய் என்பவர், இரவு 10 மணியளவில் கணவருடன் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது, அவரின் லக்கேட்ஜில் இருந்த நகைப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகாரளித்தார். பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், மர்மநபர் ஒருவர் பெண்ணிடம் இருந்து நகைப்பையை திருடி ஆட்டோவில் தப்பி செல்வது தெரியவர, கத்திப்பாரா அருகே சிவகங்கை அரசு பேருந்தில் இருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், சிவகங்கையை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பது தெரியவர, அவரிடம் இருந்து 14 சவரன் நகையை பறிமுதல் செய்து போலீசார் கைது செய்தனர்.