பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த திமுக பிரமுகர் - அமைச்சர் துரைமுருகன் நேரில் அஞ்சலி
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே பி.கே.புரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக, இந்நிகழ்ச்சிக்காக பேனர் கட்டும் பணியில், வடுகந்தாங்கல் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் மார்கபந்து ஈடுபட்டிருந்தர். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடலுக்கு திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், எம்.பி.கதிர் ஆனந்த் ஆகியோர், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.