ஈரோடு மாவட்டத்தில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த சரக்கு லாரி ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு பேப்பர் பண்டல்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரியை ஓட்டுநர் தசரதன் என்பவன் ஓட்டி சென்றுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கூடுதுறை அருகே வளைவு ஒன்றில் திரும்பிய போது, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.